web log free
June 13, 2026

ஹிஸ்புல்லாஹவின் இடத்துக்கு சாந்த பண்டார

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞர் கழகத் தலைவருமான சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹவின் இடத்துக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிவான ஹிஸ்புல்லாஹ, தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, நேற்று (04) இராஜினாமா செய்துகொண்டார்.

அந்த வெற்றிடத்துக்கே சாந்த பண்டார நியமிக்கப்படவுள்ளாரென, தவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, இது தொடர்பான இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.

இதேவேளை, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ, கிழக்கு மாகாண ஆளுநராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd