web log free
March 22, 2026

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

சேவை நிமித்தம், பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் காணப்பட்டது.

பின்னர், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் அந்தப் பிரிவு அவரின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd