web log free
February 08, 2026

இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் பிரான்ஸில் கைது

பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான அமல் சமிந்த சில்வா என்ற 39 வயதான ரத்மலானே அஞ்சு பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாருக்கு இந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் சர்வதேச பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த இவர், கடந்த காலத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd