web log free
October 01, 2023

67 அரச வைத்தியர்கள் செய்த காரியம்

இவ்வருடத்தில் பயிற்சிக்காக வௌிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பயிற்சிக்காக வௌிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.