web log free
October 01, 2023

நாட்டில் பரவும் வைரஸ் கொரோனாவின் புதிய பிறழ்வாக இருக்கலாம்

இந்த நாட்களில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடாக இருக்கலாம் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நோயின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு மாறுபாடுகள் ஏற்படலாம் என சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட அதே சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும், முறையாக  முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்றும் அவர் மேலும் கூறினார்.