web log free
June 07, 2023

தேடப்பட்ட சந்தேக நபர் புதிய காத்தான்குடியில் கைது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை பொருத்திய குற்றச்சாட்டின் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் ஆதம் என்பவரே இவ்வாறு இன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

குண்டுதாரி பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேன் தேவாலயத்திற்கு அருகில் கடந்த 22 ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், படையினர் அதனை பாதுகாப்பாக வெடிக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Thursday, 16 May 2019 02:54