web log free
September 30, 2023

16 மாணவிகளுக்கு கணித பாடத்திற்கு பதிலாக பாலியல் பாடமெடுத்த ஆசிரியர் கைது!

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் களுத்துறை தனியார் கல்வி வகுப்பு ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதான இவர் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் திருமணமானவர், மேலும் அவருக்கு எதிராக அவரது மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் வெளிவரும் என்றும், அவர்களை அவதானித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.