சமுர்த்தி வங்கி கலைக்கப்படும் என தேசிய வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (12) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
சமுர்த்தி வங்கியை மூடும் அல்லது கலைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் செய்திகளை உருவாக்குவதை ஏற்க முடியாது என்றும், இந்த வங்கிகள் சரியான நடைமுறைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டு மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சமுர்த்தி வங்கியில் கிடைக்கும் நிதியினால் எந்தவொரு சேமிப்பிற்கும் பாதிப்பு ஏற்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமுர்த்தி வங்கியின் கையிருப்பு நிதி எந்த வகையிலும் பாதிக்கப்படாது எனவும், சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் செயற்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.