web log free
June 06, 2023

கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு ரவூப் ஹக்கீம் வாழ்த்து! இணைந்து செயற்படவும் இணக்கம்

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக இன்று (17) நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு இருவரும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள கட்சி பிரதிநிதிகள் சகிதம் விரைவில் ஆளுநருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

Last modified on Wednesday, 17 May 2023 08:18