web log free
June 24, 2026

கொழும்பில் தடைகளை மீறி ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர்!

14ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று கொழும்பு, பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் தடைகளை மீறி கொழும்பில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd