web log free
June 06, 2023

வசந்த முதலிகே உள்ளிட்டோர் இன்று நீதிமன்றில்

பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 8 மாணவர் செயற்பாட்டாளர்கள் இன்று (19) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களனி பல்கலைகழகம்  முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி காயப்படுத்தியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கலவரத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அமைதியின்மை காரணமாக காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிரிபத்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.