web log free
September 30, 2023

குடும்பத்துடன் பாராளுமன்றம் செல்ல விரும்பும் ஜனக்க ரத்நாயக்க!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தை காண தனக்கும் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.