July 03, 2026

தயாசிறி மீது பொலிஸ் விசாரணை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொதுச் செயலாளர் தன்னை தாக்கியதாக ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தாம் தாக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.