இலங்கையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் உலகின் மிகப் பெரிய மாணிக்கக்கல் தொடர்பான மதிப்பீடுகளில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாக கோப் குழு அல்லது பொது விவகாரங்களுக்கான குழுவில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை கையாண்ட விதம் அவர்களின் தொழில் கௌரவத்திற்கு கூட தகுதியானதல்ல என கோப் குழுவின் உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அங்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளரால் பத்து இலட்சம் பெறுமதியான மாணிக்கக்கல் விற்பனை செய்யப்படவில்லை எனவும், இவ்வாறான கொத்துக்கள் எங்கும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இப்படி ஒரு பொய்யான பாசாங்குக்கு காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அங்கு பதிலளித்த ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளர் அமல் தென்னகோன், மாணிக்கக் கொத்து தகுந்த அளவில் வெட்டப்பட்டு மெருகூட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்ட தொகை அதன் காப்புறுதி பெறுமதியே எனவும் குறிப்பிட்டார்.