web log free
June 28, 2026

’அருப்பல’ முகாம் கண்டுபிடிப்பு

ஐ.எஸ் அமைப்பின் தற்கொலை குண்டுதாரிகள் பயிற்பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த பல நாட்களாக தொடர்ச்சியாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையை அடுத்து, குறித்த முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கண்டி, அருப்பல தர்மாசோக மாவத்தையிலுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீடொன்றே, பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பயிற்சி முகாம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd