web log free
April 29, 2025

வலிப்பு வரும் அளவு மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கல்லூரி மாணவர்கள் மூவரை தாக்கிய ஆசிரியரை நேற்று (27) தெலிப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தலைமுடியை வெட்டாமல் பாடசாலைக்கு வந்த மாணவர்களை ஆசிரியர் திட்டியுள்ளார்.

தாக்குதலின் காரணமாக மூன்று மாணவர்களின் வாயில் இருந்து இரத்தம் கசிந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவருக்கு வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவர்களின் பெற்றோர்கள் யாழ்.பிராந்திய கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் மாணவர்களை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தினமும் அடிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் பெற்றோரின் புகாரின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd