web log free
September 30, 2023

மொட்டுக் கட்சி எம்பிக்களை அவசரமாக சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கலந்துரையாடலின் பின்னர் அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதவிகளுக்காக காத்திருக்கும் கட்சியல்ல என்று கூறினார்.