web log free
September 30, 2023

அதுவும் அமெரிக்காவின் சதி - விமல்

பௌத்தத்தை அவமதித்த நடாஷா பௌத்தத்திற்கு எதிராக அமெரிக்காவினால் திட்டமிட்டு மேடையேற்றப்பட்டவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செயற்திட்டமொன்றில் பணியாற்றியவர் எனவும் USAID நிறுவனத்திலும் பணியாற்றியவர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

“சுத்தோதனன் மகன்” என்று கூறி பௌத்தத்தை தாக்கும் இவ்வாறான எழுத்துக்கள், இந்த செயற்பாடுகள் அப்பாவி செயற்பாடுகள் அல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Wednesday, 31 May 2023 06:38