இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடம் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.
எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படும் என அறிந்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உத்தரவுகளை பெற்றுக் கொள்ளாததால் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகஸ்தர்கள் 50% ஆகக்குறைந்த கையிருப்பை பேண வேண்டும் எனவும், அவ்வாறு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமத்தை மீளாய்வு செய்து இடைநிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.
மேலும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனத்திடம் உள்ள எரிபொருள் இருப்பு குறித்தும், அவரது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.