web log free
February 08, 2026

கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேச நிபுணத்துவ ஆலோசனை பெற ஆளுநர் செந்தில் நடவடிக்கை

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான வசதிகளை செய்து தருமாறு வெளியுறவு அமைச்சரிடம் ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதற்கு சாதகமான பதிலை வழங்கியதாகவும் எதிர்காலத்தில் திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd