பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேரின் வகுப்புகளுக்கு தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய மாணவர்கள் குழுவிற்கு அழுக்கு அரிசியை ஊட்டி கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மாணவர்கள் கடந்த 5ம் திகதி பல்கலைக்கழகத்தின் அக்பர் விடுதிக்கு முகாமைத்துவ பீடத்திற்குள் நுழைந்த புதிய மாணவர்களை அழைத்துச் சென்று கெட்டுப்போன மற்றும் அழுகிய அரிசியை ஊட்டி அவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த இரண்டாம் வருட மாணவர்கள் குழுவொன்று தற்காலிகமாக வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் திகதி முதல் இந்த வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.