web log free
February 08, 2026

கிழக்கு மக்கள் நேரடியாகப் பயனடையும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சேவைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வகையில், "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" திறந்து வைக்கப்பட்டது.
 
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இப்பிரிவினை திறந்து வைத்தார். 
 
ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ், 24 மணி நேரமும் செயற்பட கூடிய வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தொலைபேசியின் ஊடாக தெரிவித்து தீர்த்துக்கொள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் ஆளுநர் செயலகத்தால் மேற்பார்வை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd