இந்நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
டெங்கு மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே பரவி வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும், காய்ச்சல் ஏற்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கோ அல்லது பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கோ அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.