web log free
June 04, 2026

பொலிஸ் மா அதிபருக்கு மேலும் சேவை நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது சேவைக்காலம் இன்றுடன் (26) முடிவடைகிறது.

புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை பரிந்துரைகள் தாக்கல் செய்யப்படவில்லை.

அத்துடன் அரசியலமைப்பு சபை இன்றும் நாளையும் கூடவதற்கான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் விரைவாக மேற்கொள்ளப்பட மாட்டாது.

இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேட்டபோது, புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி வருகையின் பின்னர் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்தார். ஆனால் அரசாங்கம் அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd