web log free
June 08, 2026

10 கோடி பெறுமதியான தங்கத்துடன் 24 வயது யுவதி கைது

பத்து கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை விமான நிலைய டியூட்டி ப்ரி வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் தனது உடலுறுப்பு பகுதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

24 வயதுடைய இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய வர்த்தக நிலையத்தின் அழகு நிலையத்தின் பணியாளராவார்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது, விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 05 கிலோவிற்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் வைத்துக்கொண்டு வெளியேறும் போது விமான நிலைய பாதுகாப்பு கமெராவில் இருந்து இந்த சம்பவத்தை அவதானித்த பின்னர் கைது செய்துள்ளனர்.

தற்போது இந்த யுவதியும் கைது செய்யப்பட்டுள்ள தங்க ஜெல் பொதிகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd