web log free
July 01, 2025

ஆந்திர மாநில முதல்வரிடம் செந்தில் தொண்டமான் முன்வைத்த முக்கிய கோரிக்கை

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடியதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

BOI ஆடைகள் தொழிற்சாலைகள் குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற் வலயத்தில் முதலீட்டாளர்களை தொழிற்சாலை அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் கோரிக்கை விடுத்ததாக கிழக்கு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் பலர் இருப்பதாகவும் அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்க உதவுமாறும் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிக்கைக்கு ஆந்திர மாநில முதல்வர் சாதகமான பதிலை அளித்ததுடன் கிழக்கு ஆளுநருக்கு திருப்பதி பெருமாள் சுவாமி சிலை வழங்கி கெளரவித்தார். 

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd