web log free
July 01, 2025

இரு பெண்களையும் தேரரையும் நிர்வாண நிலையில் தாக்கிய 8 பேர் கைது

நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் வீடொன்றினுள் வைத்து தேரர் ஒருவரையும் இரு பெண்களையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் 8 பேர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினர் பெண் ஒருவருடனும் அவரது மகளுடனும் வீட்டில் இருந்தபோது, ​​வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த பிரதேச இளைஞர்கள் குழுவொன்று அவரையும் ஏனைய இருவரையும் தாக்கி வீட்டிலிருந்த தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd