web log free
February 07, 2026

'இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு தாய் நாட்டை பாதுகாத்துள்ளது'

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய ஆற்றல் எமது இராணுவத்தினரிடம் காணப்படுவதாக முப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் உறுதியாக நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற “இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும்” பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd