அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால், அதன் பின்னர் உருவாகும் அரசாங்கத்தின் கீழ் ஹனாதிபதியுடன் இணைந்து நாட்டுக்காக செயற்படுவதற்கு சமகி ஜனபலவேக தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கலைத்து விட்டு சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்க முடியும் எனவும் இவ்வாறான பின்னணியில் ஆணை பெற்று ஆட்சி அமைக்க சமகி ஜன பலவேகய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யாமல் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட குழுவுடன் இணைந்து நிற்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.