ஹொரணை, எட்டுகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு போதைப்பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் வந்து நான்கு மாதக் குழந்தையை பத்து வயதுக் சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, ஒரு நபர் சிசுவுடன் வந்து, தனது மகனுக்கு சிசுவை கொடுத்துவிட்டு விரைவில் வருவேன் என்று கூறிவிட்டு, இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும், அந்த நபர் வரவில்லை என சிறுவனின் தாய் தெரிவித்ததாக ஹொரணை பொலிஸ் பரிசோதகர் நேற்று (11) மாலை தெரிவித்தார்.
பொலிஸ் பரிசோதகர் உடனடியாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பாளர் எல்.டி.லியனகே உட்பட அதிகாரிகள் குழுவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சிசுவை மீட்தாக தெரிவித்தார்.
சிசுவை ஹொரண ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பத்து வயது சிறுவனை காவலில் வைத்து தப்பியோடிய நபர் தீவிர போதைக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.