விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் போது 12 வயது பாடசாலை மாணவியின் மார்பகத்தை தொட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதனால் அதிபருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைதண்டனை விதித்து அநுராதபுரம் நீதவான், மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய மேலும் உத்தரவிட்டார்.
தற்போதும் அதிபர் பதவியில் உள்ள காமினி சோமரத்ன என்ற அதிபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டார்.
12 வயது சிறுமியின் மார்பகத்தை 20016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் தொட்டு இந்த குற்றச் செயலைச் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 345 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அதிபருக்கு எதிராக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் வழக்குத் தாக்கல் செய்தது.