காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபையில் பணிபுரியும் முகாமைத்துவ உதவியாளர் கிருமி தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முகாமைத்துவ உதவியாளர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, உவர்ப்பு மருந்தைக் கொடுப்பதற்காக அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த கானுலாவில் இருந்து கிருமியொன்று அவரது உடலில் நுழைந்ததாகவும், இரத்தத்தின் ஊடாக பயணித்து ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல் மற்றும் ரத்தத் தட்டுக்கள் கடுமையாக குறைந்ததால், மருத்துவரின் பரிந்துரைப்படி கானுலா மூலம் சேலைன் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பினார்.
குணமடைந்து வீட்டுக்குச் சென்றவர் கானுலா பொருத்தப்பட்டிருந்த கை வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.