பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண காணொளிகளை இணையத்தில் பரப்பியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று (13) குருநாகல் பிரதான பாடசாலையின் 06 மாணவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது மகளின் நிர்வாண காணொளிகள் இணையத்தில் பரப்பப்பட்டதாக வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் முதலாவது சந்தேகநபர் முறைப்பாட்டாளரின் மகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், மாணவியின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோ காட்சிகள் சந்தேகநபரின் ஆப்பிள் கையடக்கத் தொலைபேசியில் பதியப்பட்டிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.
வரக்காபொல பிரதேசத்தில் 6ஆம் சந்தேகநபரான மாணவியின் வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றதாகவும், அங்கும் மாணவர்கள் மது அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்போது, முதலில் சந்தேகப்படும் மாணவன் தனது காதலியிடம் கோபித்துக்கொண்டு, அதன்படி மாணவியின் நிர்வாண வீடியோக்களை இணையதளத்தில் தனது நண்பர்களுக்குப் பரப்பிவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இது தொடர்பான நிர்வாண காணொளிகளை இணையத்தில் பரப்பியதாக நீதிமன்றில் தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கைது செய்யப்பட்ட மாணவர்கள் குருநாகல் பிரதான பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் உள்ள முக்கிய குடும்பங்களின் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய 6 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.