web log free
December 07, 2023

சிம் அட்டைகள் தொடர்பில் விசாரணை

நீர்கொழும்பு கொச்சிக்டை பகுதியில் மாஓயாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரத்து 500 சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சிம் அட்டைகள் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாஓயாவில் மீன்பிடிக்க சென்ற இளைஞர்கள் சிலர் நேற்றைய தினம் குறித்த சிம் அட்டைகள் பையொன்றில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

சிம் அட்டைகள் பயன்படுத்தப்படாத நிலையில், எதற்காக மறைத்து வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.