கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை எரித்து நாசம் செய்தமை தொடர்பிலான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க ஆரம்பித்துள்ளது.
அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆரம்ப கட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அழிக்கப்பட்ட அசையா சொத்துக்களுக்காக கடந்த அரசாங்கத்தின் கிட்டத்தட்ட 15 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட 72 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அழிக்கப்பட்ட சொத்து வீடுகள் மற்றும் பொருட்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் பல சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. குழுக்கள் மூலம் உரிய அறிக்கைகள் வழங்கப்பட்டு, அதற்கேற்ப இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகள் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை மதிப்பிடும் போது பெறுமதியற்ற விலைகளை வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இடிந்த கட்டிடங்களுக்கு இழப்பீடும், இரண்டாம் கட்டமாக சேதமடைந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும்.
சில அரசியல்வாதிகள் தமது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக பெருமளவிலான காப்புறுதி இழப்பீடுகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் விசாரணையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அழிக்கப்பட்ட தனது சொத்துக்களுக்கான நட்டஈடு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், அதனை ஒரு குழுவினர் பெற்றுள்ளதாகவும் தமக்கு தெரியவந்துள்ளது.