முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான ஜோதிடரான சுமணதாஸ அபேகுணவர்தனவுக்கு, காரொன்றை பரிசளிப்பதற்காக, மிஹின் லங்கா நிறுவனத்திடமிருந்து 8.2 மில்லியன் ரூபாய், மக்கள் பணம் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீ லங்கன் கெட்டரிங் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், ஆஜராகிய சுமணதாஸ, தனக்கு காரொன்று வழங்கப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவர் அளித்த சாட்சியத்தின் பிரகாரம், 2007 ஆம் ஆண்டு நிஸான்-என்16 என்ற வகையைச் சேர்ந்த காரொன்று தனக்கு வாங்குவதற்காக, மஹிந்தவின் அறிவுறுத்தலின் பிரகாரம், இந்தப் பணம் விடுவிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.