web log free
December 02, 2023

'இரண்டாம் தவணை இறுதிப் பரீட்சை வேண்டாம்'

இரண்டாம் தவணை இறுதிப் பரீட்சைகளை நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் சங்கம், கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த ஒரு மாதத்துக்குள் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதால் தவணை பரீட்சையை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.