பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாட்டை பிரிவினைவாதத்திற்குப் பலியாக்கும் அபாயம் மற்றும் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு உண்மையான தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொடர்பிலான நீண்ட ஆவணமொன்றை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாட்டை பிரிவினைவாதத்திற்கு பலியாக ஆக்குவதன் அபாயம் குறித்து விளக்கினர்.
அதனையடுத்து, தேசியப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என எழுதப்பட்ட நீண்ட ஆவணத்தை விமல் வீரவன்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.