பொமிரிய சுமணராம விகாரையில் அத்துமீறி நுழைந்து விகாரையின் தலைவர் பல்லேகம சுமண தேரர் மற்றும் இரு பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு சந்தேக நபர்களையும் தலா ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யுமாறு கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று (26) உத்தரவிட்டார்.
அத்துடன், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையிலும் சந்தேகநபர்கள் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொமிரிய சுமணராமய என அழைக்கப்படும் விகாரைக்குள் நேற்று இரண்டு பெண்கள் பிரவேசித்ததாகவும், அவர்கள் வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் நவகமுவ பொலிஸார் இந்தக் குழுவினருக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லட்டுவாஹெட்டி தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்த நிலையில், வழக்கின் மீள் விசாரணை நவம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.