இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஒருவர் அமெரிக்கா செல்வதாக அறிவித்துவிட்டு கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு கச்சா எண்ணெயை இறக்கும் போது பீப்பாயில் இருந்து எண்ணெய் மாயமான சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்த போது இந்த அதிகாரி விடுமுறை பெற்று அமெரிக்கா சென்றிருந்தார்.
மூன்று மாத சுற்றுலா செல்வதாக கூறி விடுப்பு எடுத்த நிலையில், தனது மனைவி மூலம் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தனக்கு கனடாவில் வேலை கிடைத்துள்ளதாகவும், பணியை ராஜினாமா செய்வதாகவும் மனைவி ஊடாக அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கச்சா எண்ணெய் பீப்பாய்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ள இந்த அதிகாரி இலங்கைக்கு வர வேண்டும் என கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.