web log free
June 09, 2026

பதவியில் இல்லாத பலருக்கு விஐபி பாதுகாப்பு, ஞானசார தேரர் செய்த காரியம்!

நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் பலருக்கு இன்னும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் சுமார் நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்கள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏறக்குறைய 20 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னாள் ஆளுநர்களான ஹேமல் குணசேகர, சரத் ஏக்கநாயக்க, டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் அனுராதா யஹம்பத் ஆகியோர் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர்தேரர் தாமாக முன்வந்து திருப்பி அனுப்பியதாக மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd