புதிய கூட்டணியின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடும் விசேட கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பு மஹகம சேகர மாவத்தையிலுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் நடைபெற்றது.
நிமல் சிறிபால, ஜோன் சேனவிரத்ன, அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த், நிமல் லான்சா, நளின் பெர்னாண்டோ, லசந்த அழகியவன்ன, பியங்கர ஜயரத்ன, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
"இப்போது மொட்டு கட்சியினர் மிகவும் பயந்துவிட்டனர். அதனால் தான் இதை நிறுத்துமாறு ஜனாதிபதி பசிலிடம் கூறுகிறார்" என பிரியங்கர கூறினார்.
அதற்கு நாம் சளைத்திருக்கக் கூடாது என அனுர யாப்பா தெரிவித்துள்ளார்.
லான்சா களத்தில் இறங்கினால் என்ன நடக்கும் என்று பசிலுக்கு தெரியும், அதற்குத்தான் பயந்து இருக்கிறது” என்று லான்சாவைப் பார்த்து பிரியங்கர கூறினார்.
இதேவேளை, தற்போதைய மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி வார்த்தைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
“இப்போது மொட்டு கட்சியினர் வாய்சவடால் விடுகின்றனர். ஆரம்பத்தில் இருந்த நிலை இந்த பிசாசுகளுக்கு நினைவில் இல்லை” என்றான் ஜோன்.
ஆம், வெளியில், வீதியில் இறங்கவோ கூட முடியாமல் இவர்கள் இருந்தார்கள் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
“ஜனாதிபதி தலையிட்டு இந்த நாட்டை அமைதிப்படுத்தினார். நாம் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கினார். அதை நினைத்துக்கூட பார்க்காமல் ஜனாதிபதியை தாக்குகிறார்கள்” என்று கூட்டத்தை பார்த்து லன்சா கூறினார்.
இதற்கிடையில் அமைச்சர் அமரவீர வந்திருந்த மக்களுக்கு இரவு உணவை தயார் செய்திருந்தார்.
“அமரே வீட்டில் ஆப்பம் பிழைக்காது அதனால் சாப்பிட பயமா இருக்கு” என்று சிரித்துக் கொண்டே சுசில் கூறினார். அந்த விருந்து அமைச்சர் அமரவீரவின் மனைவி தான் தயாரித்தது என்றும் குழுவினர் பேசினர். அரசியல் கதைகள் தவிர, சுவாரசியமான கதைகளுக்கு இங்கு பஞ்சமிருக்கல்லை.