web log free
December 07, 2023

வெலிவேரியவில் துப்பாக்கிச்சூடு

வெலிவேரிய நகரிலிருந்து குறுக்கு வீதியில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காரில் பயணித்த 24 வயதுடைய நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வலது கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலவேரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.