web log free
February 09, 2026

குடிநீர் விநியோகம் பாதிப்பு

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குருணாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளுக்கு ஏற்றவிதத்தில் நீர் திறந்து விடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாரத்திற்கு ஒரு தடவை நீர்வரத்து கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd