web log free
November 26, 2024

சஜித்துக்கு புதிய தலையிடி!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவில் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுவுடன் தொடர்புடையதாகும். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதே பெரும்பாலான நாடாளுமன்றக் குழுவின் கருத்தாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு சஜித் பிரேமதாசவை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்துள்ளவர்களின் எண்ணிக்கை கையில் இருக்கும் விரல் எண்ணிக்கையை விட குறைவாக இருப்பது சிறப்பு.

எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டும் என கோரும் குழு, ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றால் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் ராஜித சேனாரத்ன, குமார வெல்கம மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் சிறு கட்சிகள் அந்த கோரிக்கையை விரும்பவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பெரும்பான்மையினரின் இந்தக் கோரிக்கையினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நுகேகொடை ஸ்டான்லி திலகரட்ன மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd