web log free
March 28, 2026

மூன்று உயிர்களை பலியெடுத்த அதிகாலை விபத்து

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் மாங்குளம் பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோதியதில் பனிச்சிங்குளம் பகுதியில் லொறிக்கு முன்னால் நின்றிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லொறியின் பின்னால் சென்ற நபரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த இருவருமே படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையிலும், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd