கடுமையான சூரிய ஒளியின் காரணமாக இந்த நாட்களில் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் என தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் நயனி மதரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளியில் செல்லும் போது கவரிங் உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதன் மூலம், சருமத்தில் ஏற்படும் தீவிர சூரிய ஒளியின் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும், சூரிய ஒளியில் தீவிர வெளிப்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர் கூறினார்.
எனவே, வெயிலைத் தவிர்க்க தலையில் தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூரியனில் நீண்ட நேரம் வெளிப்படுவதால் சருமம் வேகமாக வயதாகி விடுவதாகவும், சூரியனில் உள்ள புற ஊதா கதிர்கள் வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.