web log free
July 09, 2025

திறந்த வெளியில் நடக்கும் ஐதேக மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.

வழமையாக வெளிப்புற மைதானங்கள் அன்றி கததாச உள்ளக விளையாட்டரங்கம் இதற்கு தெரிவு செய்யப்பட்டும். ஆனால் இம்முறை லேக்ஹவுஸ் முன்றலில் உள்ள பெரிய வாகன தரிப்பிடத்தில் நடத்தப்படுகிறது.

இக்காலத்தில் 147 தொகுதி கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், 13 தொகுதிகளில் கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் 2 தொகுதிகளும், வடக்கில் 5 தொகுதிகளும், கேகாலை மற்றும் பதுளையில் பல தொகுதிகளும் கூட்டம் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த தொகுதி அமைப்பாளர்களின் ஒழுக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கான காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd