web log free
December 05, 2023

தயாசிறியை விரட்ட சதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை கட்சியில் இருந்து வெளியேற்ற பெரும் சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியில் இருந்து தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள் குழுவும் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்டமாக அவரது தொகுதியான பதுவஸ்நுவர பிரதேசத்தில் நடைபெறவிருந்த மாநாட்டு நிகழ்வு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் அவர் கட்சியை ஒன்றிணைப்பதை விட அமைப்பாளர்களும் உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேறும் அளவிற்கு செயற்பட்டு வருவதாக தயாசிறி ஜயசேகரவை எதிர்க்கும் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.