web log free
February 08, 2026

பதிவாளர் நாயக திணைக்களத்தி புதிய அறிவித்தல்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் 6 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இதுவரை ஆவணங்கள் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதி இருந்தால், புதிய பிரதியை பெறவேண்டிய அவசியமில்லை என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவேட்டில் ஏதாவது திருத்தம் செய்யப்பட்டிருந்தால், புதிய பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd